"அந்த ஹிட் படத்தில் ரஜினி நடிக்க வேண்டியது" -எந்த படம் தெரியுமா ?

rajini

மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசேப் டைரக்க்ஷனில் த்ரிஷ்யம் என்ற படம் பெரிய ஹிட் படமாக அமைந்தது .இப்படம் பல மொழிகளில் ரிமேக் செய்யப்பட்டு அத்தனை மொழிகளிலும் ஹிட் ஆனது .குறிப்பாக தெலுங்கு ,கன்னடம் ,ஹிந்தி ,சீன மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது .இப்படம் 2013 ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்தது 
இப்படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் என்ற பெயரில் 2015-ல் வெளியானது. இதில் கமல்ஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர். மலையாளத்தை போல் தமிழில மலையாளத்தை போல் தமிழிலும் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது
இந்த நிலையில், திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்காதது ஏன் என்பதற்கு இயக்குனர் ஜீத்து ஜோசப் விளக்கம்  கொடுத்துள்ளார். அதாவது, "பாபநாசம் படத்திற்கு ரஜினிகாந்த்தான் முதல் தேர்வாக இருந்தார், ஆனால் படத்தில் போலீஸ் தாக்குவது போன்ற காட்சிகள் அவரது ரசிகர்களுக்கு  பிடிக்காது என நினைத்தேன், இதற்கிடையே கமல் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார், இதை அறிந்த ரஜினிகாந்த், "சூப்பர்! வாழ்த்துகள்!" என பெரிய மனதுடன் அவருக்கே உரித்தான பாணியில் கூறி எங்களை வாழ்த்தினார்" என்று தெரிவித்துள்ளார்.

Share this story