ரஜினி படத்திலிருந்து விலகிவிட்டாரா சிபி சக்ரவர்த்தி ?... புதிய தகவலால் அதிர்ச்சி !
சூப்பர் ரஜினியின் படத்திலிருந்து இயக்குனர் சிபி சக்ரவர்த்தி விலகிவிட்டதாக வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் இளம் இயக்குனராக இருப்பவர் சிபி சக்ரவர்த்தி. அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சிபி சக்ரவர்த்தி, ‘டான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

முதல் படம் சூப்பர் ஹிட்டடிக்க அடுத்தடுத்த சூப்பர் ஸ்டாரின் 170வது படத்தை இயக்கும் அதிஷ்டம் சிபி சக்ரவர்த்தி கிடைத்ததாக தகவல் வெளியானது. இந்த படத்தில் மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன், அரவிந்தசாமி, வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறப்பட்டது.

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால் அதற்கு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் லைக்கா தயாரிக்கவிருந்த இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் சிபி சக்ரவர்த்தி சொன்ன கதையில் ரஜினிக்கு திருப்தியில்லை என்றும், அதனால் அந்த கதை வேண்டாம் என்று ரஜினி சொல்லிவிட்டாராம். தற்போதைக்கு ‘தலைவர் 170’ படத்திற்கு இயக்குனர் முடிவாகவில்லை என்று தகவல்கள் கசிந்துள்ளது.

