'ஜெய் பீம்' போன்று உருவாகும் 'ரஜினியின் 170' படம்.. கதை குறித்த புதிய தகவல் !

rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 170வது படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

rajinikanth

இந்த படத்தை அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். மும்பையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.‌‌ இதையடுத்து ரஜினி தனது 170 படத்தில் நடிக்கவுள்ளார். 'ஜெய் பீம்' படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இந்த படத்தை இயக்கவுள்ளார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. தற்போது இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். சமூகத்தில் நடைபெறும் போலி என்கவுண்டர் குறித்து பேசும் படமாக இப்படம் உருவாகவுள்ளது. உண்மையாகவே நடைபெற்ற ஒரு போலி என்கவுண்டரை கதையாக மாற்றியுள்ளார் இயக்குனர் டிஜே ஞானவேல். இதேபோன்று தான் சூர்யாவின் 'ஜெய் பீம்' படமும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Share this story