லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைகிறார்களா ரஜினி - கமல் ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி - கமல் ஆகியோர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் ரஜினி சாரும் கமல் சாரும் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு கதைய நான் ரெண்டு பேர் இருக்கும் போதே சொன்னேன், அவங்க கதைய கேட்டுட்டு நடிக்க கிட்டதட்ட
ஒத்துக்கிட்டாங்க.
நான் சொன்ன கதை இரண்டு வயதான கேங்ஸ்டர்ஸ் அவர்களின் வாழ்க்கையை பற்றியானது. தற்பொழுது அவர்கள் இரண்டு பேருடைய பிசினசும் பெருசு. அவர்கள் தான் இதைப்பற்றி முடிவெடுக்க வேண்டும், ஆனால் இதை தற்பொழுது சாத்தியமாக்குவது கொஞ்சம் கஷ்டம்" என கூறியுள்ளார்.