33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - மணிரத்னம் கூட்டணி?
1728207626000
1991-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'தளபதி' படம் இன்றளவும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது. ஆக்ஷன், காதல் சென்டிமெண்ட் ஆகியவை கொண்ட கிளாசிக் படமான 'தளபதியி'ல் மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா மற்றும் பலர் நடித்திருந்தனர். நடிகர் அரவிந்த் சாமி தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமும் இதுவே ஆகும். ரஜினி மற்றும் மணி ரத்னம் கூட்டணி மீண்டும் இணையுமா என்று நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.இந்நிலையில், தற்போதைய தகவலின் படி ரஜினிகாந்த்- மணிரத்னம் ஆகியோர் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய படம் குறித்தான அறிவிப்பு ரஜினிகாந்த் பிறந்தநாளான டிசம்பர் 12-ந்தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. இதற்கிடையே ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது. மறுபுறம் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் 'தக் லைஃப்' படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.

