லால் சலாம் பட டப்பிங்கில் ரஜினிகாந்த்

லால் சலாம் பட டப்பிங்கில் ரஜினிகாந்த்

லால் சலாம் திரைப்பத்தின் டப்பிங்கில் தீவிரம் காட்டும் ரஜினிகாந்த்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் இந்த படத்தில் நாயகர்களாக நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவு அடைந்து அடுத்த கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. 

Share this story