ராமர் கோயில் திறப்பு சர்ச்சைக்கு ரஜினி விளக்கம்

ராமர் கோயில் திறப்பு சர்ச்சைக்கு ரஜினி விளக்கம்

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பகவான் ஸ்ரீராமர் கோயில் குடமுழுக்கு, பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளி பண்டிகையாக இருக்கும் என்பதில், சந்தேகமே இல்லை. இதில் திரை நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், அரசியல் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகிலிருந்து நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய கருத்து ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. அயோத்தியில் பேசிய ரஜினிகாந்த், 500 ஆண்டுகால பிரச்சனை முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். இது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய இயக்குநர் பா ரஞ்சித், ரஜினி சொன்ன கருத்துக்கு பின்னால் இருக்கும் அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டும் என விமர்சித்தார்.

ராமர் கோயில் திறப்பு சர்ச்சைக்கு ரஜினி விளக்கம்

தற்போது அந்த சர்ச்சைக்கு நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் தெரிவித்தார். சென்னை வந்தடைந்த ரஜினி பேசியபோது, நான் இதை ஆன்மிக பயணமாகத் தான் பார்க்கிறேன். ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

Share this story