‘லால் சலாம்’ ஷூட்டிங்கை முடித்த ரஜினிகாந்த்.. கேக் வெட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா !

lal salaam

‘லால் சலாம்’ படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார். 

’3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘லால் சலாம்’. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.  நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் காமெடி நடிகர் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

lal salaam

 கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்‌.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் பயிற்சியாளராக நடித்து வருகிறார். 

lal salaam

இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியின் பல இடங்களில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்நிலையில் 'லால் சலாம்' படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் நேற்று நிறைவு செய்தார். இதையொட்டி படக்குழுவினர் அவர் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

 

Share this story