இந்திய முப்படை வீரர்களை பாராட்டிய ரஜினிகாந்த்...!
1746960034407

பாகிஸ்தானிற்குள் சென்று தாக்குதல் நடத்திய இந்திய முப்படை ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கேரளாவிற்கு ஜெயிலர் 2 பட ஷூட்டிங் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார்.
#Watch | "இந்திய முப்படை வீரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்"
— Sun News (@sunnewstamil) May 11, 2025
-நடிகர் ரஜினிகாந்த் பேட்டி#SunNews | #IndiaPakistan | @rajinikanth pic.twitter.com/AztH0kDWPJ
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்," பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு பாராட்டுகள்.
போரை வலிமையாக, திறமையாக கையாண்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருக்கும் எனது வாழ்த்துகள்" என்றார்.