RJ விக்னேஷ்காந்தின் இடைவிடாத 50 மணி நேர போட்காஸ்ட்டிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து

vigneshkanth

RJ விக்னேஷ்காந்த் மற்றும் 'சுட்டி' அரவிந்த் ஆகியோர் இணைந்து பிளாக் ஷீப் தமிழ் என்ற யூட்யூப் சேனலை நடத்தி வருகின்றனர். இந்த யூட்யூப் சேனலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை கௌரவிக்கும் வகையில், 50 மணி நேர இடைவிடாத நேரலை நிகழ்ச்சியை RJ விக்னேஷ்காந்த் நடத்தினார். இந்த நிகழ்ச்சி சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல மாலில் நடைபெற்றது. ரஜினியின் 50 ஆண்டுக் கால திரை வாழ்க்கையை போற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், திரைப்படத் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் ரஜினியின் ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர் செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு முடிவடைந்த இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

vigenshkanth

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் கின்னஸ் சாதனை சான்றிதழை விக்னேஷ்காந்திடம் வழங்கினார். இந்நிலையில், 50 மணி நேர இடைவிடாத போட்காஸ்ட் நேரடி ஒளிபரப்பு நடத்தியதற்காக ஆர்.ஜே.விக்னேஷ்காந்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். விக்னேஷ்காந்த் மற்றும் அவரது குழுவினர் அதிகம் சிரமப்பட வேண்டாம் என்று வாய்ஸ் நோட் ஒன்றை ரஜினிகாந்த் அனுப்பியுள்ளார். அதில், அவர்களின் கடின உழைப்புக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

Share this story