பட்டையை கிளப்பும் சூப்பர் ஸ்டார்... 'ஜெயிலர்' கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு !

jailer

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது. 

 jailer

'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'ஜெயிலர்'. விஜய்யின் 'பீஸ்ட்' படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்காக இசையமைப்பாளர் அனிரூத் தாறுமாறாக இசையமைத்து வருகிறார். 

jailer

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படபிடிப்பு கடலூரில் நடைபெற்றது. இதில் ரஜினி மற்றும் யோகி பாபு நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி மற்றும் சிவ ராஜ்குமார் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி மாஸாக இருக்கும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

 jailer

இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதனால் முழுக்க முழுக்க ஜெயிலில் நடப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவ ராஜ்மோகன், யோகிபாபு. வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story