மாஸ் காட்டும் 'ஜெயிலர்'... அதிரடியாக வெளியான ரிலீஸ் தேதி !
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது ‘ஜெயிலர்’. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நிறைவுபெற்றது.
இதையடுத்து தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதியோடு சேர்த்து மோஷன் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில் உள்ளிட்ட பல மொழி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#SUPERSTAR @rajinikanth s #jailer 😊
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) May 4, 2023
From 10th August 💥
An @anirudhofficial musical @sunpictures 💥 https://t.co/hsj5ySQPDO