அயோத்தி கோயில் விழாவில் பங்கேற்க புறப்பட்டார் ரஜினிகாந்த்
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீராமர் கோயில் குடமுழுக்கு, பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளி பண்டிகையாக இருக்கும் என்பதில், சந்தேகமே இல்லை. அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதன்படி திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள், தொழில் அதிபர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
nullஅயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்னையிலிருந்து புறப்பட்ட நம் பாபா🤘 அவர்கள்... #Rajinikanth #ThalaivarNirandharam #SuperstarRajinikanth #AyodhaRamMandir #ஜெய்ஸ்ரீராம் pic.twitter.com/RXUFzNX5jU
— SUNDAR MAHALINGAM (@mahalaingam) January 21, 2024
அதன்படி பிரபல நடிகர் ரஜினிகாந்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திலிருந்து அயோத்தி புறப்பட்டார்.