ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் டைரக்டர் யார் தெரியுமா?

rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் கூலி மற்றும் ஜெயிலர் -2 படத்திற்கு பின்னர் எந்த இயக்குனரோடு இணைய உள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது 
நடிகர் ரஜினிகாந்த், தனது 75வது வயதை  நெருங்கிய போதிலும், இப்போதும் வரிசையாக ஹிட் படமாக கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ஜெயிலர் என்ற படத்தில் நடித்தார் .இந்த படம் பல நூறு கோடிகளை வசூலில் அள்ளியது .இந்த படத்தை சன் பிட்சர்ஸ் தயாரித்து நல்ல லாபம் கண்டது 
இதற்கு முன்பு  வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல கதையாக இருந்தாலும், ரசிகர்களுக்கு பெரிதாக பிடிக்காததால் படம் தோல்வியை தழுவியது. இதையடுத்து அவர் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களில் கமிட் ஆனார்.
தற்போது நடிக்கும் கூலி ,ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் எந்த இயக்குநரின் படத்தில் நடிக்கிறார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் அடுத்து எந்த இயக்குநரிடம் கதை கேட்டிருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை, ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில், விஜய்யின் காட்சிகள் முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இப்படம் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து, அவர் ரஜினிகாந்தின் ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.ஆனால் இந்த வெற்றி கூட்டணி இணையும் என்று கோலிவுட்டில் ஒரு தகவல் உலா வருகிறது 

Share this story