ரத்தம் தெறிக்கும் ரஜினி, நெல்சன், அனிருத் காம்போ.. வெளியானது ஜெயிலர் 2 அறிவிப்பு..!

jailer 2

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என ஏற்கனவே நெல்சன் தெரிவித்திருந்தார். இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.


படத்தின் "ப்ரோமோ ஷூட்" பணிகள் கடந்த மாதம் நடைப்பெற்றது. தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடத்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் ஸ்பெஷல் ஆக ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.  அதில் 4 நிமிடங்களாக உள்ள இந்த அறிவிப்பு வீடியோவில் அனிருத் நெல்சன் இடையே பேசிக்கொண்டிருக்கும் போது ரத்தம் தெறிக்க ரஜினி ரவுடிகளை கொலை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.   

Share this story