ரஜினி பட தயாரிப்பாளர் மறைவு... திரையுலகில் தொடரும் சோகம் !

hemnage babuji

ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஹேம்நாக் பாபுஜி இன்று காலமானார். 

தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த நடிகை ஜமுனா, ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம், இயக்குனர் விஸ்வநாத், டப்பிங் கலைஞர் செல்வராஜ், 'பரியேறும் பெருமாள்' நடிகர் தங்கராஜ், பாடகி  வாணி ஜெயராம், நடிகர் டிபி கஜேந்திரன் ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளனர். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

hemnage babuji

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் பிரபல தயாரிப்பாளர் ஹேம்நாக் பாபுஜி இன்று மரணமடைந்துள்ளார். கடந்த 1980-ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் சூப்பர் ஸ்டார் 'காளி' படத்தை முதன்முதலில் தயாரித்தார். அதன்பிறகு கடந்த 1981-ஆம் ஆண்டு சிவி ராஜேந்திரன் நடிப்பில் வெளியான 'கர்ஜனை' படத்தையும் இவர் தயாரித்தார். பின்னர் 24 மணி நேரத்தில் சாதனை முயற்சிக்காக எடுக்கப்பட்ட 'சுயவரம்' படத்தையும் தயாரித்தார். 

பைனான்சியராகவும் வலம் வந்த அவர், சினிமாவில் பல்வேறு அமைப்புகளில் பொறுப்புகளை வகுத்துள்ளார்.  இந்நிலையில் வயது மூப்பு காரணமாக தயாரிப்பாளர் ஹேம்நாக் பாபுஜி இன்று காலமானார். அவரது மறைவு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story