ரெட்ரோ படத்தில் ரஜினி ரெபரென்ஸ்...இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ரெட்ரோ படத்தில் ரஜினி ரெபரென்ஸ் இருப்பது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கமளித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்துள்ளது. தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மே 1-ம் தேதி வெளியாகவுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் டீஸர் மற்றும் பாடலுக்கு இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் ரெட்ரோ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பலரும் அந்த கிளிம்ப்ஸ் வீடியோவை பார்த்து ரெட்ரோ கிலிம்ப்ஸ் தளபதி படத்தில் ரஜினி மற்றும் ஷோபனா பேசும் காட்சியை நினைவுபடுத்துவதாக கூறினார்கள். இந்நிலையில் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ படத்தை பற்றி பேசியிருந்தார். கார்த்திக் சுப்புராஜ் தீவிர ரஜினி ரசிகர் என்பதால், அவர் இயக்கும் படங்களில் ரஜினி ரெபரென்ஸ் இருப்பது வழக்கமான ஒன்று தான் என கூறப்பட்டது.
ஆனால், வைக்கவேண்டும் என்பதற்காக ரஜினி ரெபரென்ஸ் வைக்க மாட்டேன். தன்னையும் மீறி சில இடங்களில் ரஜினி ரெபரென்ஸ் வந்துவிடும் என கார்த்தி சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரெட்ரோ படத்தில் ரஜினி ரெபரென்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ரெட்ரோ படத்தை பார்த்த சூர்யா மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.