ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்வி - தெரியாது என நழுவிய சூப்பர் ஸ்டார்
1725191131000
மலையாள சினிமாவை தற்பொழுது இந்த ஹேமா அறிக்கை புரட்டிப் போட்டுள்ளது. மலையாள சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுக்குறித்து நடிகர் மோகன்லால் நடிகர் சங்கம் சார்பாக அறிக்கையை வெளியிட்டார் அதில். நடிகர் சங்கம் இந்த பாலியல் குற்றச்சாட்டு விசாரணைக்கு முழு ஒத்துளைப்பு தரும் என கூறியிருந்தார். தினமும் ஒவ்வொரு செய்திகளாக வெளிவந்துக் கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சனையை குறித்து தமிழ் திரைப்பட நடிகர்களிடம் கேள்வி கேட்டால். யாரும் தங்களுக்கு தெரியாது என மௌனம் காக்கின்றனர். நடிகர் ஜீவா, கார்த்தி, ரஜினி உள்பட அனைவரும் இதற்கு பதிலளிக்க மறுக்கின்றனர். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் மலையாள சினிமா ஹேமா அறிக்கையைப் பற்றி கேட்டனர் .ஆனால் ரஜினிகாந்த அதை பற்றி தனக்கு தெரியாது என கூறிவிட்டார்.