தெலுங்கில் ரீ ரிலீசாகும் ரஜினியின் சூப்பர் ஹிட் படம்... ரசிகர்கள் செம்ம ஹாப்பி !

sivaji

 நடிகர் ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படமாக ‘சிவாஜி’ தெலுங்கில் ரீ ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமாக வெளியானது ‘சிவாஜி’. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு இந்த படம் திரையரங்கில் வெளியானது. இந்த படத்தில் ஸ்ரேயா, ரகுவரன், சுமன், விவேக், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

sivaji

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்தது. பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்திய சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் என்று சொல்லுமளவிற்கு பட்டி தொட்டியெங்கும் சூப்பர்ஹிட்.  இன்றளவும் சிவாஜி திரைப்படம் ரசிகர்களால் திருவிழா போல கொண்டாடப்பட்டு வருகிறது. 

sivaji

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் சுமார் 100 கோடி வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் ‘சிவாஜி’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

 

Share this story