ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் 3-ஆவது பாடல் வெளியானது!
1753230621000
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிகிறது.
கூலி திரைப்படம் உலகளவில் 5000-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக பல சாதனைகளைச் செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 3-ஆவது பாடலான பவர்ஹவுஸ் ஆடியோ வெளியாகியுள்ளது. ஏற்கெனவே வெளியான 2-ஆவது பாடலான மோனிகா லிரிக்கல் விடியோ மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

