பிறந்தநாள் ஸ்பெஷல் : ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் புதிய அப்டேட்
நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை கூலி படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்தநிலையில், தற்போது சென்னை, விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Get ready for the Deva's birthday treat!
— Sun Pictures (@sunpictures) December 12, 2024
6 PM 🔥😎 #Coolie@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off #HappyBirthdaySuperstarRajinikanth #HBDSuperstarRajinikanth pic.twitter.com/fGnoLhqQhL
தற்போது ஜெய்ப்பூரில் நடக்கும் படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் அமீர்கான் இணைந்து நடித்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு கூலி படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது படத்தின் புதிய போஸ்டராகவோ அல்லது கிளிம்ஸ் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.