500 கோடியை நெருங்கிய ‘ஜெயிலர்’... மாஸ் ஹிட்டால் வசூல் மழை !

jailer

 ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் 500 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார். 

jailer

இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

தமிழகத்தை தாண்டி, மற்ற மொழிகளில்ம், வெளிநாடுகளில் கூட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் முதல் நாளில் 96 கோடியும், இரண்டாவது நாளில் 56 கோடியும், மூன்றாவது நாளில் 69 கோடியும் வசூலித்தது. இப்படி படிபடியாக உயர்ந்த வசூல்  10 நாளில் 500 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 கோடி பட்ஜெட்டில் உருவான ஜெயிலர் மாஸ் ஹிட்டடித்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.ரஜினியின் கேரியரில் ‘2.O‘ படத்திற்கு பிறகு ‘ஜெயிலர்’ திரைப்படம் தான் இந்த டார்க்கெட் அடைந்துள்ளது. 

Share this story