ஓவர்சீஸ் கலெக்‌ஷனே இவ்வளவா ?... பட்டையை கிளப்பும் ‘ஜெயிலர்’ !

jailer

‘ஜெயிலர்’ படத்தின் ஓவர்சீஸ் கலெக்‌ஷன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார். படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

jailer

இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்களும் இந்த படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பாராட்டி வருகின்றனர். 

தமிழகத்தை போன்று வெளி மாநிலங்களிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோன்று வெளிநாடுகளில் இந்த படம் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் ஓவர்சீஸ் வசூல் நிலவரம் குறித்த அறிவிப்பை ஐங்கரன் இன்டர்நேஷ்னல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் 33 கோடி வசூலித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் வரலாற்றில் முதல்முறையாக இந்த தொகையை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 

Share this story