அட்டகாசமாக நிறைவுபெற்ற ‘ஜெயிலர்’... கேக் வெட்டி கொண்டாடிய சூப்பர் ஸ்டார் !

jailer

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வந்த ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவுபெற்றுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அதிரடியாக உருவாகி வருகிறது ‘ஜெயிலர்’. ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஒய்வுபெற்ற ஜெயிலராக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். சமீபகாலமாக ரஜினிகாந்தின் திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறாத நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

jailer

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 

jailer

இந்த வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். கடந்த மாதமே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தயாரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள் மட்டும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்ததது. இதில் ரஜினிகாந்த் மற்றும் தமன்னா இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்றது. இதை நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார். இது குறித்த புகைப்படங்கள் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.  

 

Share this story