இன்று காத்திருக்கும் தரமான சம்பவம்.‌.. மாலை வெளியாகும் 'ஜெயிலர்' அப்டேட் !

jailer

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது ‘ஜெயிலர்’. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்த படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.‌ இதற்கு காரணம் இந்த படத்தின் கதை மற்றும் அனைத்து விஷயங்களும் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 

 jailer

அதனால் இந்த படத்தில் ரஜினியை வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சம்பவம் செய்திருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.  ‌அதோடு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து பல மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்‌. அதன்படி மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அநேகமாக இது ரிலீஸ் குறித்த அறிவிப்பாக இருக்கும் என தெரிகிறது.  ‌ ‌ 

Share this story