ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற சங்கமித்ரா அன்புமணி!

rajinikanth

அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள ’அலங்கு’ திரைப்படத்தின் டீசரை இன்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுகிறார். ’அலங்கு’ திரைப்பட டீசரை இன்று (டிச.10) நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுகிறார். எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அலங்கு’. அலங்கு திரைப்படத்தை பாமக தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா அன்புமணி தயாரித்துள்ளார். சங்கமித்ரா அன்புமணி சினிமாத்துறையில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். அலங்கு திரைப்படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

முன்னதாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட தனது தாயார் சௌமியா அன்புமணிக்காக சங்கமித்ரா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் அலங்கு திரைப்படத்தின் டீசரை இன்று (டிச.10) மாலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுகிறார். முன்னதாக ரஜினிகாந்த் அலங்கு திரைப்பட குழுவை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.



அப்போது அலங்கு திரைப்பட டீசரை ரஜினிகாந்த் பார்த்து, படத்தில் நடித்த நடிகர்களை பாராட்டினார். அப்போது சங்கமித்ரா அன்புமணியும் உடனிருந்தார். அலங்கு திரைப்படத்தின் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் இதற்கு முன்னதாக உறுமீன், பயணிகள் கவனிக்கவும் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.



வரும் டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்த் தற்போது ஜெய்ப்பூரில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’கூலி’ திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள அலங்கு திரைப்படத்தின் டீசரை ரஜினிகாந்த் வெளியிடுவது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Share this story