மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாரா ரஜினிகாந்த்? முக்கிய தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர் வீடு திரும்பினார் என்பதும், அவர் இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுரை செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவலின் படி, ரஜினிகாந்த் இன்று முதல் "கூலி" படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு "கூலி" படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று நடைபெற இருப்பதாகவும், பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இன்றைய படப்பிடிப்பில், ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும், உடல்நல குறைவுக்கு பின் மீண்டும் எழுந்த ரஜினிகாந்த், இன்று முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, ஷோபின் ஷாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.