முதல்வருடன் இணைந்து ‘ஜெயிலர்’ பார்க்கும் ரஜினிகாந்த்..

முதல்வர் யோகி ஆதியநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தை பார்க்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வட இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வரும் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. நேற்று முன்தினம் தான் மிகவும் விரும்பும் பாபாஜியின் குகைக்கு சென்று வழிப்பட்டார்.
இந்நிலையில் இன்று உத்தரபிதேச மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்திடம், முதல்வர் யோகி ஆதியநாத்துடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படம் பார்க்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் படத்திற்கான வரவேற்பு குறித்து கேட்டதற்கு எல்லாம் இறைவன் அருள் என்று தெரிவித்தார்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. கடந்த 10-ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்கில் வெளியாகி உலகம் முழுவதும் பட்டையை கிளப்பி வருகிறது. ரசிகர்கள் கொண்டாடி வரும் இப்படம் சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Actor Rajinikanth arrives in Uttar Pradesh's Lucknow, says, "I will watch the film (Jailor) with the CM". pic.twitter.com/wsBdkosu18
— ANI (@ANI) August 18, 2023
#WATCH | Actor Rajinikanth arrives in Uttar Pradesh's Lucknow, says, "I will watch the film (Jailor) with the CM". pic.twitter.com/wsBdkosu18
— ANI (@ANI) August 18, 2023