‘‘ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்’’ - பிரதமருக்கு ரஜினி பிறந்தநாள் வாழ்த்து

rajinikanth
பிரதமர் நரேந்திர மோடிக்கு, நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: “மரியாதைக்குரிய, அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என ரஜினி தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் விஜய் வெளியிட்டிருந்த வாழ்த்து செய்தியில், ”பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய இதயப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுள், மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Share this story