'ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் ரஜினியை காண திரண்ட ரசிகர்கள்.. வீடியோ வைரல்...!

‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்ற நடிகர் ரஜினிகாந்தைப் பார்க்க, ரசிகர்கள் திரண்டனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர்’. விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்தனர்.இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் உலக அளவில் ரூ.600 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இரண்டாம் பாகத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார்.
Recent video of Superstar #Rajinikanth from the sets of #Jailer2🌟🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) April 12, 2025
Shooting on full swing at Attapadi, Kerala🎬 pic.twitter.com/H31URJE0li
இப்படத்துக்கான படப்பிடிப்புகள் கேரளாவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதற்காக கேரளா மாநிலம் அட்டப்பாடிக்கு சென்ற ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். தனது காரில் இருந்து வெளியே வந்த ரஜினி, கையை அசைத்து ரசிகர்களை மகிழ்வித்தார். அதன் பிறகு காரில் ஏறி, தங்கும் விடுதிக்கு அவர் சென்றார். ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி ’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.