முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை
இந்திய சினிமாவின் டாப் ஹீரோவான ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கிய அந்தப் படம் மெகா ஹிட்டாகி உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வரை வசூலித்தது. ஜெயிலருக்கு முன்னதாக வெளியான இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் சோர்வடைந்திருந்த ரஜினி ஜெயிலர் ஹிட்டால் மீண்டும் ஃபாமுக்கு வந்தார். இதைத் தொடர்ந்து, மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து முடித்தார். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. அதேபோல, ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே, நேற்று ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். அவருக்கு திரை நட்சத்திரங்கள் மட்டுமன்றி அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் அவர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.