தனி விமானத்தில் பெங்களூர் பறந்த ‘ரஜினி’…..புனித் ராஜ்குமாருக்கு விருது.

ரஜினி

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசு அறிவித்த ‘ரத்னா விருது’வழங்கும்  விழாவில்  கலந்துக்கொள்ள நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலமாக  பெங்களூர் சென்றுள்ளார்.

புனீத்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார். ரசிகர்களால் பவர் ஸ்டார் என்றும், அப்பு என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார். இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கியது.

ரஜினி

சமீபத்தில் கூட புனித்தின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக அரசு புனித்தின் சாதனைகளை போற்றும் வகையில் அவருக்கு உயரிய விருது வழங்க ரசிகர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலருமே பரிந்துரைத்தனர். இதனை ஏற்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைரத்னா விருதுவழங்கப்படும் என அறிவித்தார்.

ட்க்

அதன்படி புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக  அரசு அறிவித்த ரத்னா விருது வழங்கும் விழா பெங்களூருவில் இன்று மாலை 4 மணிக்கு விதான சவுதா மண்டபத்தில் நடைபெற உள்ளது.அஸ்வினி புனித் ராஜ் குமார் இந்த விருதை பெற்று கொள்ள  இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் பெங்களூர் சென்றுள்ளார். அவரை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார். அதற்கான வீடியோ இணையத்தில்  வெளியாகி வைரலாகி வருகிறது.


 

Share this story