கோபத்தில் ரஜினிகாந்த்……மகளுடன் மோதலா!......- படப்பிடிப்பிலிருந்து பாதியில் கிளம்பிய காரணம் இதுதான்.

photo

ஐஸ்வர்யா ரஜினிகாந்த தற்போது  லால்சலாம் படத்தை இயக்கி வருகிறார். விளையாட்டை மைய்யமாக வைத்து தயாராகிவரும் இப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணுவிஷால் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதால் படத்தின் மீதா எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. அதில் ரஜினியின் லுக் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. சிலர் இப்போஸ்டரை விமர்சனம் செய்தும் பதிவுகளை பகிர்ந்தனர்.

photo

இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் குளறுபடியால் படப்பிடிப்பு தளத்திலிருந்து பாதியில் ரஜினி வெளியேறியதாக சொல்லப்படுகிறது அதாவது, 2 வார சூட்டிங்கிற்காக மும்பை சென்ற ரஜினி மூன்று நாள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம் நான்காவது நாள் ஷூட்டிங்கில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கும் நடிகர் வராததால் படப்பிடிப்பு நடைபெறவில்லையாம். ஐந்தாவது நாளும் அதே நிலை நீடித்ததால் படப்பிடிப்பு நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமான ரஜினிகாந்த். ஐஸ்வர்யாவிடம் கரராக பேசிவிட்டு மும்பையை விட்டு கிளம்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றனர். வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Share this story