“மாரி ஒரு அருமையான மனிதர்…” – ரஜினிகாந்த் இரங்கல்.

photo

மாரிமுத்துவின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருப்பதாக பலரும் வேதனை தெரிவித்து வரும்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

photo

தேனியை சேர்ந்த மாரிமுத்து சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்து கவிஞர் வைரமுத்துவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி தனது திரை வாழ்வை துவங்கினார். பின்னர் ராஜ்கிரண் இயக்கி நடித்த ‘அரண்மனைகிளி’,’ எல்லாமே என் ராசாதான்’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல் ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ ஆகிய படங்களை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார். இயக்கம் மட்டுமல்லாமல் நடிப்பிலும் அசத்தினார். வாலி, பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து அசத்திய மாரிமுத்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது சின்னத்திரையில் ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலமாக தான். அந்த தொடரில் அவர் பேசும் ‘இந்தாம்மா ஏய்…’ என்ற வசனம் அவரை புகழின் உச்சிக்கே இட்டு சென்றது. இப்படி உச்சியில் இருந்த அவரை மரணம் பள்ளத்தாக்கில் வீழ்த்தியுள்ளது.


 

டப்பிங் பணியில் இருக்கும்போதே மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் மாரிமுத்து. தொடர்ந்து  பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.” என தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் மாரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  

Share this story