கடற்கரையில் காத்துவாங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – மின்னல் வேகத்தில் வைரலாகும் புகைப்படம்.

photo

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற  சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தை வட்டமடித்து வருகிறது.

photo

ஜெய்லர் மற்றும் லால்சலாம் படங்களின் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த கடந்த வாரம் சுற்றுலாவுக்காக மாலத்தீவு சென்றார். சென்னையிலிருந்து மாலத்தீவுக்கு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸில் பயணித்த ரஜினி குறித்து, புகைப்படத்துடன் அந்நிறுவனம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அதில் “நட்சத்திர நடிகர் ரஜினிகாந்த் ஸ்ரீ லங்கன் எர்லைன்ஸில் சென்னையிலிருந்து மாலே வரை மிக அழகான பயணத்தை மேற்கொண்டார். அழகான நினைவை உருவாக்கி எங்களுடன் பறந்ததற்கு நன்றி” என பதிவிட்டிருந்தனர்.

photo

இதனை தொடர்ந்து தற்போது  சூப்பர் ஸ்டார் அவர்கள் மாலத்தீவு கடற்கரையில் சாதாரணமாக சிவப்பு நிற டிஷர்ட் அணிந்து காத்துவாங்குவது போன்ற புகைப்படம் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ரஜினிகாந்தின் நடிப்பில் தயாரான ‘ஜெய்லர்’ ஆகஸ்ட் 10 ஆம் தேதியும், ‘லால்சலாம்’ விரைவிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இயக்குநர் ஞானவேல் ராஜா படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story