சூப்பர் ஸ்டாரின் ‘முத்து’ ரீ-ரிலீஸ் டீசர் இதோ!

photo

எத்தனையோ சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்தாலும் சில குறிப்பிட்ட படங்கள் இமாலய வெற்றியால் பெயர் புகழை தாண்டி காலம் கடந்தும் எப்போது பார்த்தாலும் சலிக்காது. அப்படி பட்ட ஒரு படம் தான் சூப்பர் ஸ்டார் நடித்த முத்து. அந்த படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது அதற்கான டீசர் வெளியாகியுள்ளது.

photo

photo

கவிதாலயா தயாரிப்பில், கடந்த 1995ல் வெளிவந்த முத்து படத்தை கே.எஸ் ரவிகுமார் இயக்க ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருப்பார். இந்த படத்தில் மீனா, வடிவேலு, செந்தில், சரத்பாபு, ராதாரவி, ரகுவரன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இன்றும் பலரால் ரசிக்கப்படும் பாடலாக உள்ளது. இந்த நிலையில் மீண்டும் படத்தை தியேட்டரில் பார்த்து ரசிக்க படக்குழு முடிவு செய்து ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். அதற்கான டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் மக்கள் மத்தியில் வர்வேற்பை பெற்றுள்ளது.

Share this story