‘பொம்மை மாதிரி , பண்ணு மாதிரி இருந்த மீனாவா இது!” - மீனாவை வெட்கப்பட வைத்த ரஜினிகாந்த்.

photo

கோலிவுட்டில் சூப்பர் ஹிட் ஜோடிகள் பல இருந்தாலும் இந்த ஒரு ஜோடிக்கு எப்போதும் மவுசு குறையாது அப்படிப்பட்ட ஓரு ஜோடிதான் ரஜினிகாந்த்- மீனா ஜோடி. இந்தநிலையில் சமீபத்தில்  நடந்த ‘மீனா 40’ நிகழ்சியில் கலந்துகொண்டு அனைவருக்கும் சர்பிரைஸ் கொடுத்த  ரஜினிகாந்த தனது மீனா உடனான அழகான நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.  

photo

அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது “ முதலில் 1982 ‘ எங்கேயோ கேட்ட குரல்’ திரைப்படம் அதில் மீனாவுக்கு 6-7 வயது இருக்கும் அவர் எனது மகளாக நடித்திருந்தார். அடுத்தது ‘ அன்புள்ள ரஜினிகாந்த்’ அந்த படம் எம்.ஜி.ஆர் அவர்களுக்காக தயார் செய்யப்பட்ட கதை ஆனால் அவர் முதல்வர் ஆனதால் நான் நடித்தேன். அந்த படத்தில் தான் ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்திற்கு பிறகு மீனாவை முதலில் செட்டில் பார்த்தேன்.  அப்போது மீனா பார்பதற்கு பொம்மை மாதிரி, பண்ணு (bun) மாதிரி, அமுல் பேபி மாதிரி இருந்தார், என ரஜினிகாந்த் கூறியதும் மீனா வெட்கப்பட்டு சிரித்தார்.

photo

photo

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் “ அந்த படத்தில் மீனா ஷாட் இல்லை என்றாலும் கூட கையை அப்படியே தான் வைத்திருப்பார். மீனா தூங்கும் போதுகூட கையை அப்படியேதான் வைத்திருப்பார் என அவரது அம்மா கூட கூறினார்கள்; படம் சூப்பர் ஹிட், அப்புறம் நிறைய கேப்;  தொடர்ந்து, ஏவிஎம் தயாரிப்பில் ஆர்.வி உதயகுமார் இயக்கத்தில் ‘எஜமான்’ திரைப்படம். யார் சார் ஹீரோயின் என நான் கேட்டேன். ‘மீனா’ என்றார்கள் …எந்த மீனா என கேட்டேன், என்னப்பா இப்படி கேக்குற அன்புள்ள ரஜினிகாந்த் படம் பண்ணுன மீனாதான் என சொன்னார்கள். அதுமட்டுமல்லாமல் எனக்கு மீனாவின் இரண்டு தெலுங்கு பாடல்கள் போட்டு காட்டினார்கள்.  நான் ஆடி போய்டேன்….. நம்ம பாத்த அந்த அமுல் பேபி மீனாவா இது!..... என்ன ஒரு அழகு, என்ன ஒரு மாற்றம், காலம் எவ்வளவு அற்புதங்கள் எல்லாம் செஞ்சிருக்கு பாருங்க… தொடர்ந்து வீரா, முத்து போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தோம், எனது மிக சிறந்த தோழி மீனா என தனது அனுபத்தை பகிந்துகொண்டார்.

photo

 

Share this story