‘படையப்பா’ படத்தில் நடிக்க நிராகரிக்கப்பட்ட ‘மீனா’ – எந்த கதாப்பாத்திரம்? என்ன காரணம் தெரியுமா!

photo

90’ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தமிழை கடந்து மலையாளம், தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார். இந்த நிலையில் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடிக்க மீனா விரும்பிதாகவும் அதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து சூப்பர் ஸ்டார் ‘மீனா40’ நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

photo

photo

இந்த நிகழ்ச்சியில்  போனி கபூர், கலைப்புலி எஸ். தாணு, ராஜ்கிரண், குஷ்பு, இசை அமைப்பாளர் தேவா, நாசர், பிரபுதேவா, ஸ்னேகா, ரோஜா, சுஹாசினி, ராதிகா, ப்ரீத்தா ஹரி, ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது மீனா உடனான தனது  அனுபவத்தையும், நினைவுகளையும் பகிந்து கொண்ட ரஜினிகாந்த் கூறியதாவது, “ மீனாவுக்கு நல்ல கதை ஞானம் உண்டு. என்பதால்  படையப்பா படத்தின் கதையை மீனாவிடம் கூறினேன். அப்போது அவர் நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் தான் நடிக்க வெண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார். நான் எவ்வளவோ கூறியும் அவர் கேட்கவில்லை சரி சௌந்தர்யா கதாபாத்திரத்தில் மீனாவை நடிக்க கேட்டேன். ஆனால் அவர் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க உறுதியாக இருந்தார். பின்னர் கே எஸ் ரவிகுமார் வந்து மீனாவிடம் பேசினார். மீனா முகம் குழந்தை தன்மை கொண்டது அது வில்லியான கதாப்பாத்திரம் என புரியவைத்தார். ஆனால் இப்போதும் கூட மீனாவிற்கு அந்த படத்தில் நடிக்காமல் போனதால் என்மீது கோபம் உள்ளது. என கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

photo

Share this story