“நான் எப்போதும் ஸ்ரீ தேவியை வம்பிழுப்பேன்“ ரஜினிகாந்த பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் – குலுங்கி குலுங்கி சிரித்த போனிகபூர்.

photo

சமீபத்தில்  நடந்த ‘மீனா 40’ நிகழ்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த தனது நினைவு படுக்கையில் உள்ள அழகான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அதில் அவர் மறைந்த நடிகை ஸ்ரீ தேவி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை கூற, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் உட்பட அரங்கமே சிரித்தது.

photo

 அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த கூறியதாவது, “ நான் இதுவரை 50-60 ஹீரோயின்ஸ் கூட பணியாற்றியிருப்பேன், அதில் நான் விரும்பி நடிச்சது இரண்டு ஹீரோயின்ஸ் ஒன்னு ஸ்ரீ தேவி, இன்னோன்னு மீனா. ஸ்ரீ தேவி குழந்தை நடத்திரமா ஒரு 6-7 வயது வரைக்கும் நடிச்சிட்டு, பின்பு நடிப்பதை நிறுத்திவிட்டு படிக்க சென்றுவிட்டார். அப்புறம், 15 வயதில் மீண்டும் திரைத்துறைக்கு வந்தார். ‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தில் நடிக்க நான், எனது நண்பர், கல்கதா விஸ்வநாத், மற்ற சில நடிகர்களும்  இயக்குநர் அலுவலகத்தில் இருந்தோம். அப்போது ஸ்ரீ தேவியும், அவரது தாயும் வந்தனர். ஸ்ரீ தேவி தாவணி அணிந்து வந்திருந்தார்.

photo

 தொடந்து  இயக்குநர் கே. பாலசந்தர் சார் உள்ளே வந்தார், நாங்கள் எழுந்து அவருக்கு வணக்கம் கூறினோம். அப்போது ஸ்ரீ தேவியின் தாயார், ஸ்ரீ தேவியிடம் “ பப்பி… குட் மார்னிங் செப்பு…” என சொல்லிக்கொடுதார். உடனே எழுந்து ஸ்ரீ தேவி “ குட் மார்னிங் டீச்சர்” என கூறினார். இதனை ரஜினிகாந்த்  சொன்னதும் போனிகபூர் உட்பட அரங்கில் உள்ள அனைவரும் சிரித்தனர். அதுமட்டுமலாமல் “ ஸ்ரீ தேவியிடம் நான் எப்போதும் கலாட்டா செய்துகொண்டே இருப்பேன், அவரை எப்போதும் வம்பிழுப்பேன்” என மிக அழகான நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார்.

Share this story