ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே…….- தான் வேலைபார்த்த பஸ் டெப்போவிற்கு திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்.

photo

உலகமே போற்றும் மிகச்சிறந்த நடிகராக வலம்வரும் ரஜினிகாந்த் ஒரு காலத்தில் பஸ் நடத்துனராக பணியாற்றியவர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் பழசை மறக்காத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் வேலைபார்த்த டெப்போவிற்கு திடீர் விசிட்டடித்துள்ளார்.

photo

பெங்களூரில் பஸ் நடத்துனராக பணியாற்றிய ரஜினிகாந்த், நடிப்பின் மீதுகொண்ட ஆர்வத்தால் மேடை நாடகங்களில் நடித்துவந்தார். தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆசை வரவே, தனது நண்பனின் உதவியால் சென்னை வந்து நடிப்பு கற்றுக்கொண்டார். தொடர்ந்து கே. பாலசந்தர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிப்படியாக சினிமாவில் உயர்ந்த ரஜினி இன்று எவராலும் அசைக்க முடியாத உயரத்தில் உள்ளார். இந்த நிலையில் பெங்களூர் சென்ற ரஜினிகாந்த் அங்கு தான் பணியாற்றிய ஜெயநகர் பிஎம்டிசி பஸ் டெப்போவுக்கு சென்று அங்கு பணியாற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

photo

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் பழசை ரஜினிகாந்த் மறக்கவில்லை என புகழ்ந்து வருகின்றனர்.

Share this story