“லியோ படம் வெற்றியடைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்”- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

photo

ரசிகர்கள் ஆவலாக காத்துள்ள லியோ படம் வெற்றியடைய வாழ்த்துகள், அதற்காக ஆண்டவனை வேன்டிக்கொள்கிறேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்திய பேட்டியுல் கூறியுள்ளார்.


 

ஆக்ஷன் அதிரடியில் தயாராகியுள்ள லியோ படத்திற்கு உலகம் முழுவதும் ஆதரவும், எதிர்பார்ப்பும் உள்ளது. சிறப்பு காட்சிகளுக்கு கூட அரசு அனுமதி வழங்கி ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. உலகின் பல நாடுகளில் ப்ரீபுக்கிங் படையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பின் போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த ரஜினியிடம் ‘லியோ’ குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “லியோ படம் வெற்றியடைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன், படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.   

Share this story