‘என்னை கண்டித்தவர் சரத்பாபு’- நினைவலைகளை பகிர்ந்த ‘ரஜினிகாந்த்’.

photo

மறைந்த நடிகர் சரத் பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், சரத் பாபு குறித்த தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

photo

வேலைகாரன், முத்து, அண்ணாமலை போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் சரத்பாபுவின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியநிலையில் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், அவர் கூறியதாவது” என் மீது பேரன்பு கொண்டவர். நான் புகைப்பிடிப்பதை பார்த்து வருத்தப்பட்டவர். அதனால் அவர் முன்னால் சிகரெட் பிடிக்க மாட்டேன்.  நீ ரொம்ப நாள் வாழணும் என என்னை வாழ்த்திவிட்டு இப்போது அவரே நம்மோடு இல்லை. ஒரு முறை அண்ணாமலை படத்தில் ஒரு முக்கிய டயலாகிற்கு 10லிருந்து 15 டேக் வரை எடுத்தேன், அந்த சமயத்தில் சரத் பாபு ஒரு சிகரெட்டை எடுத்துவர சொல்லி என்னிடம் கொடுத்தார். அதன் பின்னர் ஓரே டேக்கில் ஓகே ஆகிவிட்டது.  அவர் ஆன்மா சந்தியடையவேண்டும்” என உருக்கமாக நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.  

Share this story