மும்பை செல்லும் ரஜினி 170 படக்குழு

மும்பை செல்லும் ரஜினி 170 படக்குழு

ரஜினி - ஞானவேல் கூட்டணியில் உருவாகும் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மும்பை செல்லும் ரஜினி 170 படக்குழு

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து 170-வது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்களில் தொடங்கி நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தில் மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தமாகி இருக்கின்றனர். துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். இது தவிர, ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் படத்தில் இணைந்துள்ளார்.

மும்பை செல்லும் ரஜினி 170 படக்குழு

இந்நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் மும்பை பறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 
 

Share this story