ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் வெளியாகிறது

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் அதாவது 7 நாட்களில் ரூ.375.40 கோடிக்கு மேல் வசூலையும் 14 நாட்களில் 525 கோடிக்கு மேல் வசூலையும் எட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் கொண்டாட்டமாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகிய 3 பேருக்கும் பட தயாரிப்பாளர் புதிதாக காரை பரிசாக அளித்தார்.
இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் நாளை பிரபல ஓடிடி தளம் அமேசான் பிரைமில் வெளியாகிறது.