கேரளாவிலிருந்து நெல்லை பறந்த ரஜினி படக்குழு... பணகுடியில் படப்பிடிப்பு தீவிரம்...

ரஜினிகாந்த்தின் 170-வது படத்தின் படப்பிடிப்பு நெல்லை, பணக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களாக இந்த படத்தில் நடிக்கும், நடிகர் நடிகைகள் பெயரை அறிவித்து வந்தனர். துஷரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில், அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து நடிப்பதாக தெரிவித்தனர். தமிழ் கலைஞர்களுடன் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழி கலைஞர்களும் படத்தில் நடிக்கின்றனர்.
Today is the moment when the Thalaivar @rajinikanth came to shooting spot 😍#Thalaivar170Team #Thalaivar171 #SuperstarRajinikanth #suriya#Kanguva pic.twitter.com/1GXxFx5gWY
— Subash Mass (@SubashM61285096) October 10, 2023
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது நெல்லை பக்கம் படக்குழு திரும்பியுள்ளது. நெல்லை பணகுடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.