காதலை அறிவித்தார் ரஜிஷா விஜயன்
1707225985628
கர்ணன், ஜெய்பீம் ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கியவர் நடிகை ரஜிஷா விஜயன். தொடர்ந்து கார்த்தியின் சர்தார் படத்திலும் மனைவியாக நடித்திருந்தார். கடந்த 2019ல் மலையாளத்தில் ரஜிஷா விஜயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஜூன்’ என்கிற படம் தமிழில் தயாராகி வெளியானது. தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமான ஜோஜு ஜார்ஜ் இந்தப்படத்தில் ரஜிஷா விஜயனின் தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை ரஜிஷா விஜயன், தனது காதலரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மலையாள திரையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் டோபின் தாமஸை காதலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.