இட்லி கடையில் ராஜ்கிரண் நடிப்பை புகழ்ந்த நடிகர் -யார் தெரியுமா ?

Actor Rajkiran pays his gratitude towards his teachers on Teacher’s day

நடிகர் ராஜ்கிரண் நடிப்பு இட்லி கடையில் சூப்பராக இருந்தது என்று அவருடன் நடித்த நடிகர் ஒருவர் பாராட்டியுள்ளார் .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது தனுஷ் நடித்த 52-வது திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் நித்யா மேனன் கதாநாயகியாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளனர்.மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர் தயாரித்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ. 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘இட்லி கடை’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தன் குலதெய்வ அமைந்துள்ள தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் தனுஷ் கிடா வெட்டி ஊர்க்காரர்களுக்கு விருந்தளித்துள்ளார். தன் குடும்பத்தினருடன் தேனி சென்ற தனுஷ், குலதெய்வ வழிபாட்டை முடித்ததும் விருந்தளித்தார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் இளவரசு, “தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜிக்குப் பின் சிறந்த நடிகரென்றால் அது ராஜ்கிரண்தான். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. எவ்வளவோ பேர் வேட்டியை மடித்துக்கட்டி நடித்திருக்கிறார்கள். ஆனால், ராஜ்கிரணின் தோற்றம் எவருக்கும் அமையவில்லை.அப்படியொரு நடிகர். இட்லி கடையிலும் அவர் நடிப்பை பார்த்து பழைய காலத்திற்குச் சென்றதுபோல் ஆகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

Share this story