ராஜ்குமார் இயக்கும் D55 படத்தின் பூஜை வீடியோ வெளியானது

D55
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி கூட்டணியில் உருவான படம் "அமரன்." கடந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான "அமரன்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும், வசூலையும் வாரி குவித்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பலர் "அமரன்" படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். "அமரன்" படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அமரன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார். இது தனுஷின் 55 -வது திரைப்படமாக உருவாகவுள்ளது. இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. படத்தின் பூஜை விழா நேற்று நடைப்பெற்றது. விழாவில் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ், வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துக் கொண்டனர். படத்தின் பூஜை விழா வீடியோவை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் உருவாகியுள்ளது. தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story