நடிகை ராஷ்மிகாவுடன் தொடர்பில் உள்ளேன் - ரக்ஷித் ஷெட்டி
![நடிகை ராஷ்மிகாவுடன் தொடர்பில் உள்ளேன் - ரக்ஷித் ஷெட்டி](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/82dc9e9e3b597a57ab621aae4b52a119.jpg)
ரக்ஷித் ஷெட்டி மற்றும் ரஷ்மிகா மந்தன்னா நடித்த ‘கிரிக் பார்ட்டி’ என்னும் கன்னட ரொமான்டிக் காமெடி படத்தை ரகித் ஷெட்டி எழுதியிருந்தார். இந்த படத்தில் ரக்ஷித் தவிர, சம்யுக்தா ஹெக்டே, அரவிந்த் ஐயர், தனஞ்சய் ரஞ்சன் மற்றும் பிரமோத் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கிரிக் பார்ட்டி கன்னட திரையுலகில் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. கிரிக் பார்ட்டி 2 படம் தயாரிக்கப் பட உள்ளது. இந்த செய்தியை ராக்கித் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இப்படத்தின் மூலம் காதலிக்கத் தொடங்கிய ராஷ்மிகா மந்தனாவும், ரக்ஷித் ஷெட்டியும் நிச்சயம் செய்து கொண்டனர். ஆனால், சில நாட்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் ரக்ஷித், ராஷ்மிகாவுடன் எனது திருமணம் நின்று விட்டாலும், இன்று வரை நான் அவருடன் தொடர்பில் உள்ளேன். அவருக்கு மிகப்பெரிய கனவுகள் இருந்தன. அதனை அவர் அடைந்துவிட்டார் என தெரிவித்தார்.