காதலனுடன் பிறந்தநாள் கொண்டாடி ரகுல் ப்ரீத் சிங்.... திரைப்பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து...
கன்னடத்தில் வெளியான கில்லி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் யுவன், தடையற தாக்க உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
கார்த்தியுடன் அவர் இணைந்து நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் அவருக்கு பெரும் புகழை தேடித் தந்தது. அதை தொடர்ந்து, ரகுலுக்கு பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. இதனிடையே, தமிழ் மட்டுமன்றி தெலுங்கில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். என முன்னணி நாயகர்களுடன் இணைந்து அவர் நடித்துள்ளார். இந்தியிலும் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
தற்போது, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து உள்ளார். இந்நிலையில், இன்று தனது காதலருடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். மேலும், திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.Birthday Wishes To Gorgeous Rakul💖
— Bollywood Legacy Channel (@LegacyChannel_) October 10, 2023
Celebrations🎊 #HBDRakulPreetSingh @Rakulpreet pic.twitter.com/8KlFsA830O